நாட்டின் பேரவல நிலைமைக்குக் கடந்த நல்லாட்சி அரசே பொறுப்புக்கூற வேண்டும்." - மைத்திரிக்கு எஸ்.பி. பதிலடி

Prasu
4 years ago
 நாட்டின் பேரவல நிலைமைக்குக் கடந்த நல்லாட்சி அரசே பொறுப்புக்கூற வேண்டும்." - மைத்திரிக்கு எஸ்.பி. பதிலடி

"இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பேரவல நிலைமைக்குக் கடந்த நல்லாட்சி அரசே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்."

- இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

நல்லாட்சியில்  மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் எனவும், நாட்டின் தற்போதைய நிலைமைக்கு இந்த அரசின் நடவடிக்கைகளே பொறுப்பு எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு ஊடகங்களிடம் கூறினார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நல்லாட்சியின் முறையற்ற தீர்மானங்களால்தான் நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்று ஏற்பட்ட தாக்கங்களே இன்றளவிலும் எதிரொலிக்கின்றது.

எனவே, தேசிய அரசு அல்ல, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எதிரணிகளின் பொறுப்பாகும்" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4